Tuesday, May 25, 2010

விவசாயத்தின் எதிர் காலம்

நம் நாட்டில் விவசாயத்திற்கான ஒரு தீர்கமான தொலை நோக்கு பார்வை இல்லாதது வேதனை அளிப்பதாக உள்ளது. நகரத்தில் வசிக்கும் மெத்த படித்தவர்கள் கிராமத்தின் தலை எழுத்தினை நிர்ணயிக்கிறார்கள். இந்த நிலை மாற வேண்டுமானால் அனைத்து கல்வி கூடங்களிலும் விவசாயம் ஒரு காட்டாய பாடமாக இருத்தல் வேண்டும்.

விவசாயதைப் பற்றிய பாடம் ஆரம்ப பள்ளியில் இருந்து தொடங்கப் பட வேண்டும். நாம் சாப்பிடும் உணவு எப்படி விளைகிறது? என்கிற அறிவு நம் எல்லோருக்கும் வந்து விட்டால் மட்டுமே நம் நாட்டில் விவசாயம் தலை நிமிர்ந்து நிற்கும்.